ஆபத்தான பகுதிகளை சீர் செய்ய கோரிக்கை
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்லை பகுதியில் உள்ள பாரிய கற்திட்டு மேல் பகுதியில் உள்ள பாரிய மண் திட்டுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையால் காரணமாக எந்த நேரத்திலும் அப் பகுதியில் உள்ள மண் திட்டுகள் சரிந்து விழும் பட்சத்தில் அவ்வீதி ஊடாக செல்லும் வாகனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் முன் கூட்டியே இந்த மண் திட்டுகள் உள்ள பகுதிகளில் கம்பி சல்லடைகள் போடவேண்டும் என்று வாகன சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபை முன் வர வேண்டும்.
