ஆபத்தான நிலையில் காணப்படும் சியத்த கங்குல ஓயா

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு செல்லும், பிரதான வீதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது.

யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலை உச்சிக்கு செல்ல முன், இந்த இடத்தில் உள்ள சியத்த கங்குல ஓயாவில் நிராடிய பின்னர், அங்கு உள்ள சமன் தேவாலயத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு, மலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், தற்போது நிலவும் சீரற்ற வானிலையால், அப் பகுதி ஆபத்தான நிலையில் உள்ளது.

ஆகையால் அப் பகுதியில் யாத்திரிகர்கள் செல்லா வண்ணம் இரும்பு வேலி அமைக்க வேண்டும், என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.