ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றி பயணித்த இ.போ.ச பேருந்து!

 

கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து, நேற்று புதன்கிழமை பகல் 1.30 மணிக்கு, கிளிநொச்சி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது.

பேரூந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேரூந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேரூந்து பின்பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேரூந்து பயணித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன், இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேரூந்து இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக, குறித்த பேரூந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி, பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும், எனவும் பலரும் தெரிவித்துள்ளனர்.