ஆனைக்கோட்டையில் வன்முறை குழுவால் சேதமாக்கப்பட்ட வீடு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.இவர் கடந்த காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிந்தவர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்