ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் விஞ்ஞானிகள் குழு என்பன இணைந்து வடிவமைத்து இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது.

அதன்படி ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா – எல்1 விண்கலம் இன்று முற்பகல் 11.50 அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல், விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்