ஆதித்யா எல் -01 விண்கலம் தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -01 விண்கலம், சூரியனின் எல் – 01 புள்ளியை நோக்கிய பயணத்தை இன்று செவ்வாய் கிழமை ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ஆம் திகதி பி.எஸ்.எல்.வி. மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.புவி சுற்றுப்பாதையில் தமது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.