
“ஆதிகாலத்து கிழக்கிலங்கைசமூகமும் பண்பாடும்” – மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பேருரை
“ஆதிகாலத்து கிழக்கிலங்கை சமூகமும் பண்பாடும்” எனும் தலைப்பில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பேருரையாற்றும் நிகழ்வொன்று இன்று வியாழக்கிழமை பி.ப 4.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதன் பேருரையாற்றவுள்ளார்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகவுள்ள நிகழ்வில் இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்றதனைத் தொடர்ந்து வரவேற்புரையினையும் தலைமையுரையும் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி நிகழ்தவுள்ளதுடன், பேராசிரியர் அறிமுகத்தினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசாவினால் நிகழ்த்தப்படவுள்ளதுடன், இதன் போது கோடீஸ்வரனின் இயக்கத்தில் உருவான திரைப்பட சுவரொட்டி வெளியீடு இடம்பெறவுள்ளதுடன், நிகழ்வின் நன்றியுரையினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் துணைச்செயலாளர் வே.அமிர்தலிங்கம் ஆற்றவுள்ளதுடன், நிகழ்ச்சித்தொகுப்பினை தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் க.தியாகராஜா நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
