ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொலை செய்த காதலன்
காஞ்சிபுரம் அருகே, பெண்ணொருவரை, அவரது காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஆண் நண்பர்களுடன் தனது காதலி பேசுவதைப் பலமுறை கண்டித்தும், அதை அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த காதலன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும், குறித்த பெண்ணை அவர் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையிலேயே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.