ஆண்கள் மட்டும் இதை படிங்க!
ஆபாசப்படம் பார்ப்பது என்பது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான மற்றும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.
இன்று உலகளவில் இது மிகப்பெரும் வியாபாரமாக மாறிவிட்டது, இவர்களின் மிகப்பெரிய மூலதனம் இன்றைய கால இளைஞர்கள்தான்.
அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கும் இருந்த காலத்தில் எந்த இணையத்தை பார்த்தாலும் நமது கிளர்ச்சியை தூண்டும் சில ஆபாசத்தளங்களின் லிங்க்குகள் அந்த இணையத்தில் இருப்பதை நாம் தினம்தோறும் பார்க்கிறோம்.
சுயஇன்பம் காண்பது ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆரோக்கியாமான பழக்கமாகும். சுயஇன்பம் காண்பது என்பது உங்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அது எல்லை மீறாத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காணும் தவறான பழக்கம் இப்போது இளைஞர்களிடையே பெருமளவில் பரவி வருகிறது. இது அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த பதிவில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
விறைப்பு செயலிழப்பு என்பது பெண்ணுடன் உறவில் ஈடுபடும்போது ஆணுறுப்பு முழுமையான விறைப்பை அடைய இயலாத நிலையாகும். ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே அதிகமாக சுயஇன்பம் காணும்போது அது உண்மையான நெருக்கமான சூழ்நிலை ஏற்படும் போது உங்கள் ஆணுறுப்பு அதற்கு தயாராகாது.
ஆபாசப்படம் பார்க்கும்போது மட்டுமே உங்களுக்கு முழுமையான விறைப்பு ஏற்படுவதை நீங்கள் உணருவீர்கள். இதற்கு காரணம் உங்களுடைய மூளை ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பதே உங்களுடைய பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்கிறது என்று நினைக்க தொடங்குவதுதான்.
இது பெண்ணுடன் உறவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விரைவாகவே விந்து வெளியேறும் நிலையாகும். சிலசமயம் உறவில் ஈடுப்படுவதற்கு முன்பே கூட விந்தணுக்கள் வெளியேறிவிடும்.
மேலும் அடுத்த முறை விறைப்பை அடையமுடியாத நிலை கூட ஏற்படலாம். இதற்கு காரணம் நீங்கள் மிகச்சிறிய வயதிலேயே சுயஇன்பம் காண தொடங்கியதுதான். நீங்கள் உங்களின் ஆணுறுப்பு நரம்புகளை சிறிய வயதில் பயத்தின் காரணமாக விரைவில் விந்து வெளியேறும்படி பழக்கியிருப்பீர்கள். மேலும் இதனுடன் ஆபாசப்படம் பார்க்கும்போது அதன் காலஅளவு மிகவும் சுருங்கும்.
இந்த நிலையில் உள்ள ஆண்களுக்கு உச்சக்கட்டம் என்பது மிகவும் தாமதமாகவே ஏற்படும் அல்லது ஏற்படாமலே போகவும் வாய்ப்புள்ளது. இதற்கும் ஆபாசப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
ஆபாசப்படங்கள் பார்க்கும்போது விந்தணு வெளியேறுவதை தள்ளிப்போட நீங்கள் அடிக்கடி இடைவெளி விடுவீர்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் ஆணுறுப்பு இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இயற்கையான முறையில் எந்தவித புற உந்துதலும் இன்றி சுயஇன்பம் காண்பதே ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு நல்லதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்