ஆண்களின் முகம் பொலிவாக்க உதவும் ஃபேஸ் பேக்
ஆண்களின் முகம் பொலிவாக்க உதவும் ஃபேஸ் பேக்
ஆண்களின் முகம் பொலிவாக்க உதவும் ஃபேஸ் பேக்
🔶தற்போது பெண்களைப் போன்றே ஆண்களும் தங்களின் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதற்காக பல ஆண்கள் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அந்த க்ரீம்கள் ஒன்றும் விலை குறைவானது அல்ல.
🔶எனவே அனைவராலும் அந்த மாதிரியான க்ரீம்களை வாங்கி பயன்படுத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் தங்களின் சரும அழகை மேம்படுத்தவும், சரும பிரச்சனைகளைத் தடுக்கவும், நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடலாம்.
🔶இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆண்களின் சருமத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அவை என்ன என்பதை இககட்டுரையில் மூலம் பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
- இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதி தக்காளியை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 15 நிமிடம் ஆனதும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது சரும வறட்சியை அதிகரித்துவிடும்.
கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
- முதலில் 1/2 வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
- ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் பால் ஃபேஸ் பேக்
- இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வேப்பிலை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
- முகப்பரு அதிகம் கொண்டவர்கள் ஒரு கையளவு வேப்பிலையை எடுத்து நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஆண்களின் முகம் பொலிவாக்க உதவும் ஃபேஸ் பேக்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்