ஆணின் வயிற்றில் கர்ப்பப்பை – அதிர்ச்சி

இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் உள்ள ஒரு நோய் கண்டறிதல் மையத்தின் அறிக்கை, உயிரியல் விதிகளுக்கே முரணாக 47 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 47 வயதுடைய ஆண் ஒருவர் வயிற்று வலி மற்றும் வீக்கம் காரணமாக கடந்த ஜனவரி 13 ஆம் திகதி சோனோகிராபி (Sonography) பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கருப்பப்பை தலைகீழ் நிலையில் (Inverted position) இருப்பதாகவும் விவரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பரிசோதனை செய்து கொண்ட மருத்துவரிடன் பிரஜாபதி கேட்டபோது அவர் எந்த விடயமும் குறிப்பிடாமல் சென்று விட்டதாக பிரஜாபதி கூறியுள்ளார்.

இதனால் இந்தச் சம்பவம் குறித்து, பிரஜாபதி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் பிரஜாபதிக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை வேறொரு பெண்ணுடையது என தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அம்மாநில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.