ஆட்டோவில் பயணித்த 8 மாத குழந்தை உட்பட மூவர் பலி மூவர் படுகாயம் – வீடியோ இணைப்பு
கொழும்பு – கண்டி வீதியில் வேவெல்தெனிய பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், இவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வீதி மிகவும் தெளிவாக இருந்த போது சாரதியின் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது தூக்கம் காரணமாகவோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்