ஆட்டை மீட்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

திருகோணமலை மாவட்டம் – குச்சவெளி பொலிஸ் பிரிவில், பள்ளிமுனைப் பகுதியில், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது

காணியொன்றில், சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை மீட்கச் சென்றபோதே, அச்சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.