
ஆட்டுப்பட்டியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு
நோர்ட்டன் பிரிட்ஜ், கொத்தேலேன முருத்தன்வத்த பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தாய் தெரிவித்தார்.
எஸ். பிரதாப்சின் (வயது – 13) என்ற சிறுவனனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
