
ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது
காலி உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
