ஆ​​டையின்றி தோசை சுட்டதால் வழக்கு

மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகரால் நேற்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

மேலும் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் 6 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்