ஆடு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்-

மருதமுனையில் திருடப்பட்ட ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை சம்மாந்துறையில் நேற்று புதன் கிழமை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியநீலாவணை 2 – மருதமுனை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 34 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மூன்று ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது 21 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இரு சந்தேக நபர்களிடம் இருந்தும் திருடப்பட்ட மூன்று ஆடுகள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4790 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத்இ பொலிஸ் உத்தியோகத்தர்களான எம். நிரஞ்சன், ஜிஹான், உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க