
ஆசிரியை கொலை: சந்தேக நபரின் தவறான முயற்சி
மாத்தறை, ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
26 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
