ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் தில்லையடியில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்