 
												ஆசிரியர் பயிற்சிக்கு இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
இலங்கையில் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அறிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை பகுதியில் கட்டப்பட்ட பல்லின, மும்மொழிப் பாடசாலையின் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியாவுடனான ஒத்துழைப்பு, அரசாங்கத்தின் கல்வி மாற்றத் திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர் திறனை மேம்படுத்துவதன் மூலமும், புதுமையான கற்பித்தல் அணுகுமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் இலங்கையின் கல்வி முறையை வலுப்படுத்தும் என்று அவர் எடுத்துரைத்தார்.
 
			