ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்
நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்க அரசு அங்கீகாகரம் அளித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டமானது, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணிதம், கலை, மற்றும் கணிதம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்டீம் (STEAM) கருத்தை மையமாகக் கொண்டு கல்வி முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
