ஆசிரியரின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் ஆண் ஒருவரின் உடல் சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

திருப்பாதிரிப்புலி ஊரைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் விக்டர் ( வயது 40 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆணை காணவில்லை என அவரது தாய் கடந்த 28ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து குறித்த ஆணுக்கு வந்த தொலைபேசி அழைப்புக்களை ஆய்வு செய்த பொலிஸார் கடைசியாக அவரிடம் பேசிய தட்சிணாமூர்த்தி என்பவரை பிடித்து விசாரித்ததில், குறித்த ஆணை கொன்று விட்டு சாக்குமூட்டையில் கட்டி நெய்வேலி தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் வீசியது தெரியவந்துள்ளது.

மேலும் இது பற்றி தெரியவருகையில். 21 வயதான சகோதரியை உயிரிழந்த ஆண் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால்இ கொலை செய்ததாக தட்சணாமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்