
ஆசிய கிண்ணம் : புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம்
17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது.
இதன்படி சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, புள்ளிப்பட்டியலில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன.
மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
