ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைப் போட்டியாளர்களுக்கு பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன.

யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்களும் மற்றும் கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இலங்கையைச் சேர்ந்த 7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களை நயகரா சலுான் என்ட் அக்டமியின் இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்று இப் போட்டியில் பங்குபெற்ற வைத்துள்ளார் இதில் 14 நாடுகளைச் சேர்ந்த சிலை அலங்கார மற்றும் அழகுக்கலை போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.