ஆசியாவின் மிகப்பெரிய விவாகரத்து வழக்கில் தீர்ப்புக்கு தற்காலிகத் தடை!

ஆசியாவின் பெருநிறுவன வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்துத் தீர்வுகளில் ஒன்றாக அமையவிருந்த, எஸ்.கே குழுமத்தின் தலைவர் சேய் டே-வோன் மீதான விவாகரத்து வழக்கில், தென் கொரிய உயர் நீதிமன்றம் அவருக்குத் தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ளது.

எஸ்.கே குழுமத்தின் தலைவர் சேய் டே-வோன், தனது பிரிந்து வாழும் மனைவி ரோ சோ-யோங்குக்கு ஜீவனாம்சமாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க வேண்டும் என்று முன்னர் கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரோ சோ-யோங், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ டே-வூவின் மகள் ஆவார்.

கீழ் நீதிமன்றம் சேய் டே-வோனை, சொத்துப் பிரிவினையாக சுமார் 972 மில்லியன் டொலர்களும் மற்றும் ஜீவனாம்சமாக 1.4 மில்லியன் டொலர்களும் செலுத்த உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மேலும் பரிசீலனை செய்வதற்காகக் கீழ் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது.

இதன் காரணமாக, சேய் டே-வோன் உடனடியாக 1 பில்லியன் டொலரைச் செலுத்த வேண்டியதில்லை.

ஜீவனாம்சம் தொடர்பான கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தாலும், சொத்துப் பிரிவினை தொடர்பான தீர்ப்பின் ஒரு பகுதியை நிராகரித்தது.

ரோ சோ-யோங்கின் தந்தை (முன்னாள் ஜனாதிபதி ரோ டே-வூ) தம்பதியினருக்கு வழங்கிய சுமார் 21 மில்லியன் டொலர் முறைகேடான மூலங்களிலிருந்து வந்ததாக நம்பப்படுவதால், அது திருமணச் சொத்தாகக் கருதப்படக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேய் டே-வோன், தென் கொரியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவர்.

அவர் எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்ட எஸ்.கே குழுமத்தை நிர்வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.