ஆங் சான் சூகிக்கு மேலும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

76 வயதான ஆங் சாங் சூகிக்கு தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆங் சான் சூகிக்கு தற்போது 11 குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் மேல் இன்னும் பல குற்றச்சாட்டுகள் மீதமிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஆங் சாங் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆங் சான் சூகி கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.