இளையோரின் ஆக்கங்களை பகிரும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

விழுதுகள் ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் இளையோரின் ஆக்கங்களை பகிரும் வட்டமேசை கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழிலில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று.

குறித்த வட்ட மேசைக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சார்ந்து விழுதுகள் அமைப்பின் இளையோரினால் சமூகத்தில் புரையோடி உள்ள பிரச்சனைகள் தொடர்பில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகளாக வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த ஆய்வுகள் தொடர்பில் கருத்து பரிமாற்றங்கள் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கு பற்றியவர்களால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் வட மாகாண பதில் விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சமூக மட்ட அமைப்புகள் பிரதிநிதிகள் விரிவுரையாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP