அஹ்மதாபாத் விமான விபத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இந்தியத் திரைப்பட இயக்குநர்!

அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தின் பின்னர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மகேஷ் கலாவாடியா காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற போது அவர் அப்பகுதிக்கு அருகில் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படிஇ இறந்தவர்களை அடையாளம் காண அவரது குடும்ப உறுப்பினர்கள் மரபணு மாதிரிகளை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த விபத்தில் இதுவரை 270 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்இ மரபணு மாதிரிகள் மூலம் 47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு 24 பேரின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.