அஸ்வெசும பயனாளர்களின் கவனத்திற்கு!

அஸ்வெசும முதலாம் கட்டத்துடன் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

 நலன்புரி நன்மைகள் சபையினால் இந்தத் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்காக 2022/2023 ஆண்டுகளில் விண்ணப்பித்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறுவோர் மற்றும் இதுவரை கொடுப்பனவு கிடைக்காதோர் என அனைவரும் தமது தகவல்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரர்கள் தாமாகவே இணையவழியில் (Online) தகவல்களைப் புதுப்பிக்க முடியும்.

தகவல்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை கிராம உத்தியோகத்தர் அல்லது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலமும் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.