அஸ்வெசும தொடர்பில் 4 இலட்சம் மேன்முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 489,953 மேன்முறையீடுகளும் 6,783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்