
அஸ்வெசும திட்டத்திற்கான பெயர்ப்பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூட உள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்காக விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான பெயர்ப்பட்டியல் நாளைய தினம் செவ்வாய்கிழமை வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பாக இதுவரையில் 560,211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன் 5,419 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
