
அஸ்வெசும கொடுப்பனவுக்கான நிதி விடுவிப்பு
அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஒகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
