அஸ்வெசும கொடுப்பனவில் புதிய நடைமுறைகள்?

சமுர்த்தி அதிகாரசபை ஊழியர்களின் வேதனத்துக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவது தொடர்பில் கோப் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியான பெறுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய அளவுகோல்கள் குறித்தும் கோப் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போதுள்ள அளவுகோல்களை மாற்றியமைப்பதனூடாக, அஸ்வெசும திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்ற முடியும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளர் தெரிவுக்காக தற்போது பயன்படுத்தப்படும் 22 அளவுகோல்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் கோப் குழு தெரிவித்துள்ளது.

இதனால் புதிய திட்டங்களை முன்னெடுக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு, கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக உதவி பெறுவோர் மற்றும் முதியோர் உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள், கோப் குழு முன்னிலையில் அறிவித்துள்ளனர்.