அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள்

அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவித்தொகையைப் பெறத் தகுதி பெற்றும் , இதுவரையில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சருமான சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலுக்கமைய வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவித்தொகை மூலம் பயனாளிகள் பயனை அடைந்து கொள்ள முடிகின்றது.

இந்நிலையில் அடையாள அட்டை இன்றி வங்கியில் முடக்கப்பட்ட பணத்தினை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக மலையக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்வதன் மூலம் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்