அஸ்வெசும இரண்டாம் கட்டம் – மேன்முறையீட்டுக்கான கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை சமர்ப்பிற்கான கால அவகாசத்தை நலன்புரி நன்மைகள் சபை நீடித்துள்ளது .

இம்மாதம் 31 ஆம் திகதி வரை மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியும் என சபை அறிவித்துள்ளது .

இதேநேரம் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்துக்காக மேன்முறையீடு செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது .

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது .

இதற்கமைய இன்றைய தினத்திற்கு பின்னர் குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும்.

மீளாய்வின் பின்னர் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக செயலணியினூடாக குறித்த மேன்முறையீடுகள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பப்படும்.

இதன்பின்னர் பயனாளர்களை தெரிவு செய்து நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது.

இதுவரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 39ஆயிரத்து 707 மேன்முறையீடுகளும் 3ஆயிரத்து 183 ஆட்சேபனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபைகுறிப்பிட்டுள்ளது .