அவுஸ்திரேலியா நாட்டின் ஊடகவியலாளரான பெண் சுற்றுலாப்பயணியின் பையை திருடியவர் கைது!

உனவதுன பகுதியில் தனது உடைமைகள் திருடப்பட்டதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா நாட்டின் ஊடகவியலாளரான குறித்த பெண் சுற்றுலாப்பயணி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உனவதுன கடற்கரையில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகில் வைத்து குறித்த வெளிநாட்டு பெண்ணின் பெண்ணின் ஐபோன் வெளிநாட்டு நாணயம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது.

பாதிக்கப்பட்டபெண் இன்று ஞாயிற்றுக்கிழமை உனவதுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை சிலமணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கை பொலிஸாரின் பொறுப்புமிக்க உடனடி நடவடிக்கைக்கு குறித்த வெளிநாட்டு பெண் நன்றி தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை திங்கட்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.