
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடியில் கைது
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 21 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய செய்தி
