அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

215 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது