மட்டக்களப்பு மாமாங்கம் : அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த செல்லத்துரை கெங்காதரன் (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்

குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் கறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் வந்து தங்கியுள்ள நிலையில் நேற்று இரவு நித்திரைக்கு சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்

மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.