
அவுஸ்திரேலியாவில் நிலஅதிர்வு
அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்