
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது இன்று காலை 6.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இது பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது சுவாவிற்கு தென்மேற்கே 591 கி.மீ தொலைவில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
