அவுஸ்திரேலியாவின் பலமே அனுபவம்தான்- ஹேசில்வுட்

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் அனுபவமே தங்களது பலம் என்று அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் போட்டி அல்லாமல் அனைத்து நிலைகளும் இதில் அடங்கும். இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம். களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்.அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணி என்ற காலம் நிச்சயம் வரும். ஆனால் அதை நாங்கள் இன்னும் எட்டவில்லை என கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

டெஸ்டில் 300 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது