
அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக அரசாங்கம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போதே இந்த அவசர தொடர்பு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன.
அடுத்த 48 மணி நேரத்தில் எதிர்பார்க்கப்படும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமரின் அறிவுறுத்தலின்படி, உடனடி அவசர நிலைமைகளைப் புகாரளிப்பதற்காக கொழும்பு மாவட்ட பொதுமக்களுக்கு பின்வரும் அவசரகால தொடர்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
24 மணி நேர அதிகாரப்பூர்வ அவசர இலக்கம்: 117
கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு: 0112434028
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு: 0112136136
