அழிந்துபோன ஓநாயை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் சாதனை

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபு வழியாக இறந்த ஓநாயை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர்.

சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றுவதற்கு டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு-எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மூன்று ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த மூன்று ஓநாய்களும் ஒரு வெளியிடப்படாத இடத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் வாழ்வதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Dire Wolf வகையைச் சேர்ந்த இரண்டு ஆண் ஓநாய்க்குட்டிகளும் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதியும், ஒரு பெண் ஓநாய்க்குட்டி இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதியும் பிறந்துள்ளன.

இந்த 3 ஓநாய்க் குட்டிகளுக்கும் ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

Game of Thrones தொடர் கதையில் கண்டுகளித்த Dire Wolf வகையைச் சேர்ந்த ஓநாய்க்குட்டி இதுவாகும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க