
அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இளம் இன்ஸ்டா பிரபலம் மரணம்
அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இளம் இன்ஸ்டா பிரபலம் மரணம்
அழகு சாதனப் பொருட்களை உணவாக சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.
தைவானைச் சேர்ந்த பிரபல பியூட்டி இன்ஃப்ளூயன்சரான ‘Guava Beauty’ கடந்த மே 24, 2025 அன்று இறந்துவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினர் சமூக வலைதள பதிவு மூலம் அறிவித்துள்ளனர்.
குறித்த பெண் “முகத்தில் பூசும் பொருட்களை சாப்பிடும் முக்பாங்” வகை வீடியோக்கள் மூலம் அவர் புகழ் பெற்றிருந்தார்.
லிப்ஸ்டிக், பிளஷ், ஃபேஸ்மாஸ்க் போன்ற அழகு சாதனப் பொருட்களை உணவாக சாப்பிடும் தனித்துவமான காணொளிகள் மூலம் அவருக்கு 12,000 இற்கும் அதிகமான இரசிகர்கள் இருந்தனர்.
அவரது மரணம் குறித்து பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இரசாயனப் பொருட்கள் நிறைந்த மெய்க்-அப்புகளை தொடர்ந்து சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவர் சாப்பிட முடியாத பொருட்களை சாப்பிடும் இந்த விதமான காணொளிகள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு தவறான முன்மாதிரியை உருவாக்கும் என பலரும் அதைப் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
மேலும் சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.