அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் திடீர் பரிசோதனைகள்

-கிண்ணியா நிருபர்-

 

திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் பரிசோதனைகள் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் பி.இராஜேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பலசரக்கு கடைகள், சந்தைகள்,  சதோச நிறுவனம்,  பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் போன்ற இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது உரிய காலத்தில் அளவீட்டு நியமங்கள் செய்யாத 04 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இனி வரும் காலங்களில் நிறுவை அளவை மோசடி மற்றும் நிறுவை அளவை உபகரணங்கள் முத்திரையிட தவறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக திடீர் சோதனைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உதவி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்