அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டார்
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலில் சி.ஐ.ஏ நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அய்மன் அல்-ஜவாரி உயிரிழந்ததாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இறக்கும் போது அவருக்கு வயது 71.
2011 இல் ஒசாமா பின்லேடன் இறந்த பிறகு, ஜவாரி அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அவர் செப்டம்பர் 11 தாக்குதல்களை ஒசாமா பில்லேடனுடன் இணைந்து திட்டமிட்டார், மேலும் அமெரிக்காவினால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.