
அலிசப்ரி தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை: இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவினால் இன்றைய தினம் செவ்வாய்கிழமை காலை 9.30 நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 30 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் யோசனையொன்றை முன்வைத்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
