அலரிமாளிகையில் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் இளம்பெண் கைது

-திருகோணமலை நிருபர்-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கிண்ணியா-குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஆவார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நபர்களை பொலிஸார் சோதனையிட்ட போது,  சந்தேக நபரிடம் இருந்து இந்த இரண்டு அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.