அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் குறித்த பகுதியில் இஸ்ரேலியர்கள் வசிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், கிழக்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதியை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தயார் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
